ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

சேலம்: கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த 24 வயது இளம்பெண் நேற்று முன்தினம் இரவு சென்னை-ஆலப்புழா  எக்ஸ்பிரசில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். சேலம் அருகே ரயில் வந்தபோது, மேல் படுக்கையில் இருந்த வாலிபர்,  இறங்கி வந்து தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் கூச்சல் போட்டார். உடனே அருகே இருந்த பயணிகள், அந்த வாலிபரை மடக்கி பிடித்து, சேலம் ரயில்வே போலீசாரிடம்  ஒப்படைத்தனர்.  விசாரணையில், அவர்,சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பிரவீன்குமார் (30), என்பது தெரிந்தது. இதையடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, பிரவீன்குமாரை கைது  செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: