கடப்பா அருகே வனப்பகுதியில் செம்மரம் கடத்த முயன்ற 9 தமிழர்கள் கைது: 108 கட்டைகள் பறிமுதல்

திருமலை: கடப்பா அருகே வனப்பகுதியில் செம்மரம் கடத்த முயன்ற 9 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 108 கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.ஆந்திராவின் ராஜம்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் காதர்வலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ராஜம்பேட்டை மண்டலம், எஸ்.ஆர்.புரம்  வனச்சரகத்தில் வனத்துறையினர் நேற்று தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது, ஜல்லி கோணா அருகே செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பியோட  முயன்றனர்.

Advertising
Advertising

தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை விரட்டிச்சென்று 9 பேரை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 9 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.9 பேரையும் கைது செய்த போலீசார் அங்கிருந்த 50 லட்சம் மதிப்புள்ள 108 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய 11 பேரை தமிழக போலீசார் உதவியுடன் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: