மதுரையில் 17ம் தேதி தமாகா அரசியல் மாநாடு: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை: தமாகா அரசியல் மாநாடு மதுரையில் வரும் 17ம் தேதி நடக்கிறது என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமாகாவை மக்களுக்கான இயக்கம் என்பதை கொண்டு சேர்க்கவும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் என்னென்ன நியாயமான வழிகள்  இருக்கின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு யோசனைகள், கருத்துக்கள் கேட்கும் வகையில் வரும் 17ம்தேதி மதுரையில் வட்டார, நகர, பேரூராட்சி தலைவர்களின் அரசியல் மாநாடு நடக்கிறது.

Advertising
Advertising

 இதில், தமிழகம் முழுவதும் தமாகாவின் 79 மாவட்டங்களில் உள்ள வட்டார, நகர, பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டின் முக்கிய நோக்கமே கிராமம் முதல் பெருநகரம் வரை தமாகா மக்களுக்கான இயக்கம் என்பதை  மக்கள் மத்தியில் நிலை நிறுத்தத்தான்.  இதற்காக தலைவர், மூத்த துணைத் தலைவர், மூத்த முன்னணி தலைவர்கள் என அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். தமாகாவை தனித்துவம் கொண்ட கட்சியாக நடத்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் மாநாடு  நடைபெற இருக்கிறது.

Related Stories: