×

ஸ்டெர்லைட் ஆலையால் 90 சதவீத நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன: உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் தரப்பு வாதம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த பாத்திமா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டதாவது: விவசாய நிலத்தில் அபாயகரமான கழிவுகளை உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எதிர்த்து அப்பகுதியில் வசிப்பவர்கள் வழக்கு தொடர முழு உரிமை உள்ளது.   இந்தியாவில் அபாயகரமான மாசுபாட்டை  ஏற்படுத்தும் 17 நிறுவனங்களில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. ஆலையை எதிர்த்தார்கள் என்பதற்காக 13 அப்பாவி பொதுமக்கள் தங்கள் வாழ்வை இழந்துள்ளனர். அவர்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொழில்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அபாயகரமான தொழிற்சாலை அமைக்க தகுதி இல்லாத சிப்காட் தொழிற்சாலையில்  ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க தமிழக அரசு கடந்த 1993ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சிப்காட் பகுதியில் 90 சதவீதம்  நிலம் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் விளக்கமும் அளிக்காததால் பொதுமக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார்.இதையடுத்து வழக்கின் விசாரணையை நாளை (இன்று) தொடரும் என்று  நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : Sterlite plan, land affected, Social activist , High Court
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...