×

முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்கத்தால் வேலூரில் தோற்றேன் என்று சொல்வது தவறு: ஏ.சி.சண்முகத்துக்கு தமிழிசை எதிர்ப்பு

சென்னை: முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்கத்தால் வேலூர் தொகுதியில் தோற்றேன் என்று ஏ.சி.சண்முகம் சொல்வது தவறு என்று தமிழிசை கூறியுள்ளார்.தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் பாஜ உறுப்பினர் சேர்க்கை பணி நடந்து வருகிறது. இந்த பணி வருகிற 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.  காஷ்மீர் விவகாரத்தில் பிரதமரும், அமித்ஷாவும் துணிச்சலான முடிவை எடுத்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

முதல்வர், சிதம்பரம் குறித்து சொன்னதில் தப்பே கிடையாது. பதவியில் இருந்தவர் தமிழகத்திற்காக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. எந்த உதவியையும் செய்யாமல் பல்லாண்டு காலம் அமைச்சரவையில் இருந்தார் என்று  சொன்னால் அது சிதம்பரம்தான்.
முத்தலாக், காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்கம் போன்றவற்றால்தான் வேலூரில் தோற்றேன் என்று ஏ.சி.சண்முகம் சொன்னது தவறு. இதுபோன்ற அறிவிப்புகள் தான் அவர் அதிகப்படியான வாக்குகளை பெற்று தந்துள்ளது. இஸ்லாமிய  மக்கள் முத்தலாக் சட்டத்தை எதிர்க்கவில்லை. அரசியல் கட்சியினர் தான் எதிர்க்கிறார்கள். இஸ்லாமிய மக்கள் ஆதரிப்பதால்தான் குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் தோற்றுள்ளார்.


Tags : Muthalak, Kashmir, Vellore, Tamils protest ,AC Shanmugam
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...