‘சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்’

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சிபிஎஸ்இ 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்களின் தேர்வு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக எஸ்சி, எஸ்டி மாணவர்களின் தேர்வு கட்டணத்தை 50லிருந்து 1200 ஆகவும், பொதுப்பிரிவு மாணவர்களின் தேர்வு கட்டணத்தை 750லிருந்து 1500 ஆகவும் உயர்த்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி பன்மடங்கு உயர்த்தினால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிள்ளைகளை படிக்க வைக்கின்ற  பெற்றோர்களுக்கு பொருளாதார சுமை ஏற்படும்.மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் தேர்வு கட்டணத்தை ஒரே சமயத்தில் 24 மடங்கு அதிகமாக உயர்த்தியிருப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : CBSE?, Tariff, increases, Withdrawal
× RELATED சோனியாவுக்கு பாதுகாப்பு வாபஸ்...