அலுவலகம் உனக்கா? எனக்கா? அதிமுக - அமமுக மல்லுக்கட்டு : பெரியகுளம் கோட்டாட்சியரிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

பெரியகுளம்:  தேனியில் இருந்து போடி செல்லும் சாலையில் முன்னாள் ஜெயலலிதா இருந்தபோது, கடந்த 2015ல் அதிமுக அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்திற்கான இடம் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பெயரில் வாங்கப்பட்டது. அதில் 1,000 பேர் அமரும் வகையில் கட்டிடம் கட்டப்பட்டு, ஜெயலலிதா காணொலி காட்சி முலம் திறந்து வைத்தார்.

Advertising
Advertising

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கட்சி உடைந்தது. இதனால் 2016க்கு பின்னர் அலுவலகம் பூட்டி கிடந்தது. இந்நிலையில் இந்த அலுவலகம் தங்களுக்கு சொந்ததமானது என்று கோரி, அதிமுக மற்றும் அமமுக கட்சியினர் பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்களை நேற்று சமர்ப்பித்தனர். அதிமுக சார்பில் கூடுதலாக ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டது. அமமுக சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.  கோட்டாட்சியர் ஜெயப்பிரீத்தா தேதி குறிப்படாமல் விசாரணையை ஒத்தி வைத்தார். இரு கட்சியினரும் ஒரே நேரத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூடியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Related Stories: