விளையாட்டு துளிகள்

* சென்னையின் எப்சி அணியில் இருந்து மெயில்சன் விடுவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ரோமானிய வீரர் லுசியன் கோயன் (36) சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 3 சீசனிலும் மும்பை சிட்டி எப்சி அணிக்காக விளையாடி உள்ளார்.
* சர்வதேச டி20 போட்டிகளுக்கான தென் ஆப்ரிக்க அணி கேப்டனாக டி காக் நியமிக்கப்பட்டுள்ளார்.
* இங்கிலாந்தில் 2022ல் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. 24 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் இடம் பிடித்துள்ளது.
* இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் பதவி நேர்காணலுக்கான இறுதிப் பட்டியலில் ரவி சாஸ்திரி, லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங், மைக் ஹெஸ்ஸான் (நியூசி.), டாம் மூடி (ஆஸி.), பில் சிம்மன்ஸ் (வெ.இண்டீஸ்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். புதிய பயிற்சியாளரை கபில் தேவ் தலைமையிலான குழுவினர் நாளை மறுநாள் தேர்வு செய்கின்றனர்.


Tags : De Kock ,South African, T20 tournament
× RELATED மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான...