பெண்கள் விடுதியில் செல்போன் கொள்ளை

சென்னை: மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம் அருகே பெண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்கியுள்ள செரின் திரேசா டோமினிக் (20) மற்றும் 2 தோழிகள் நேற்று முன்தினம் இரவு தங்கள் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக வைத்துவிட்டு தேவாலயத்திற்கு சென்றுவிட்டனர். மீண்டும் விடுதிக்கு வந்து பார்த்தபோது, 3 விலை உயர்ந்த செல்போன்  கொள்ளை போனது தெரிந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த செரின் திரேசா டோமினிக் விடுதி காப்பாளரிடம் தெரிவித்தார். 3 பேருடைய செல்போன்களிலும் முக்கிய தகவல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்கள் விடுதி அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பெண்கள் விடுதியில் தங்கும் இளம்பெண்களின் செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அடிக்கடி மாயமாகி வருவதாகவும், இரவு நேரத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும் அங்கு தங்கியுள்ள பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related Stories: