இந்தியாவிலேயே முதன்முறையாக எடை குறைவான குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டம்

கோவை: இந்தியாவிலேயே முதன்முறையாக  1.5 கிலோ எடைக்கும்  குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக சிறப்பு  தடுப்பூசி போடும் திட்டம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  முதன்முதலாக இந்த திட்டத்தை ரூ.4 கோடி மதிப்பில் தொடங்கியிருப்பதாக கூறினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது ஒரு தடுப்பூசியின் விலை ரூ.4,000 நான்கு ஊசிகள் போட வேண்டும் என்றும்,  ரூ.16,000 எந்த விதியுமின்றி அந்த  1.5 கிலோ எடைக்கும்  குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும்  நிமோகாக்கள் மற்றும் ரத்தநால அறுவை சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட  மாண்புமிகு உள்த்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினருடைய வேண்டுகோளுக்கு இணங்க அந்த துறையை இன்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கிவைத்த பிறகு  அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

Related Stories: