அரசின் நலத்திட்டங்களை பெறும் குறைந்த ஊதிய தொழிலாளர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது

அமெரிக்கா: அரசின் நலத்திட்டங்களை பெறும் அளவிற்கு குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்ற அமெரிக்க அரசின் அறிவிப்பிற்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள், அமெரிக்காவில் தங்கியிருந்து பணியாற்றுவதற்கான புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.

Advertising
Advertising

அமெரிக்காவில் மெக்ஸிகோ உள்ளிட்ட லத்தின் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள், முறைப்படியாகவும் அரசுக்கு தெரியாமலும் குடியேரறுகின்றனர்.  இவர்கள் குறைந்த ஊதியத்தில் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.  தாங்கள் வாங்கும் ஊதியம் மிகவும் குறைவு என்பதால் மருத்துவ காப்பீட்டு, உணவு மானிய அட்டைகள் போன்ற அமெரிக்கா அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு குறைந்த ஊதியம் பெறுவோர் அரசின் நலத்திட்டங்களை பெற்றாலும் அவர்கள் நிரந்தரமாக வசிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அமெரிக்கா அரசு அறிவித்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து எச்.1-பி விசாவில் அமெரிக்காவிற்கு வந்து தங்கள் சுயத்திறமையால் உழைத்து அமெரிக்காவின் வளர்ச்சியில் பங்குபெற்று அதிக ஊதியம் பெற்று வரி செலுத்துவோரை பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

வெறுமென வேலைக்கு வந்துவிட்டு  குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டு அமெரிக்க குடிமக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை  அனுபவித்துக்கொண்டு காலம் கடத்தும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்தும்  வகையிலும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது.

Related Stories: