பாகிஸ்தான் மக்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் கண்டிப்பாக வாழக்கூடாது: வெளியுறவு அமைச்சர் குரேஷி பேச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முட்டாள்களின் சொர்க்கத்தில் கண்டிப்பாக வாழக்கூடாது. எங்களின் நிலைப்பாட்டுக்கு ஐ.நா. மாலையிட்டு வரவேற்க்க காத்திருக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது கொண்டது. மேலும், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது. இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பஸ் போக்குவரத்தையும் நிறுத்தியது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதி இருந்தது. சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது. இதற்கிடையே பி-5 நாடுகள் எனச் சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஷாபராபாத் நகருக்கு ஈகைத் திருநாள் கொண்டாட்டத்துக்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி வந்துள்ளார். அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் தொடர்ந்து முட்டாள்களின் சொர்க்கத்தில் கண்டிப்பாக வாழக்கூடாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்கு ஐ.நா.மாலை போட்டு வரவேற்கும் வரவேற்கும் என்று எதிர்பார்க்கிறோம். பி-5 நாடுகளில் எந்த நாடும் இந்தியாவின் நடவடிக்கைக்குத் தடை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.

Related Stories: