வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசு இனியாவது முயற்சி செய்ய வேண்டும் : எம்.பி. கனிமொழி கோரிக்கை

சென்னை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசு இனியாவது முயற்சி செய்ய வேண்டும் என்று மக்களவை திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் ஸ்டாலின் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீலகிரியில் மழை பாதித்த பகுதிகளை ஏன் பார்க்கவில்லை என முதல்வர் முதலில் பதில் சொல்லட்டும் என்றும் கூறினார்.மேலும் பாஜகவின் இன்னொரு கை அதிமுக என்று குறிப்பிட்ட கனிமொழி, ப.சிதம்பரத்தை பற்றி முதல்வர் இவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். முன்னதாக ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?; அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: