பூமிக்கு பாரமாக உள்ளார் ப.சிதம்பரம்: முதல்வர் பழனிசாமி காட்டம்

மேட்டூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தால் பூமிக்கு தான் பாரம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசை மத்திய அரசு கலைத்தால் கூட அதிமுக அதை ஏற்றுக்கொள்ளும் என சிதம்பரம் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு முதலமைச்சர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து முதலமைச்சர் கூறியிருப்பதாவது : ப.சிதம்பரம் இத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தும் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை என்றும் மேலும் அவர் பூமிக்கு பாரமாக உள்ளார். அவர் தனித்தன்மையுடன் எந்த திட்டமும் கொண்டுவந்து செயல்படுத்தவில்லை, எந்த நிதியும் கொடுக்கவில்லை, எந்த ஒரு புதிய தொழிற்ச்சாலையும் அமைக்கவில்லை, புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை, காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, பாலாறு பிரச்சனை என எதையும் அவர் தீர்க்கவில்லை.

Advertising
Advertising

ஏனென்றால் அவருக்கு அவருடைய சுயநலம் தான் முக்கியம். எனக்கு அவருடைய பேச்சை புண்படுத்த வேண்டிய அவசியம் இல்லை,  மக்களே அவரை நிராகரித்து விட்டார்கள். ப.சிதம்பரம் போன்றவர்களுக்கு அதிகாரம் தேவை, இதுவரை எந்த மக்களையும்சென்று அவர் சந்தித்ததில்லை. நான் முதலமைச்சர் ஆன பிறகு பலமுறை மக்களை சந்தித்து பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறோம், ஆனால் அவர் மத்திய அமைச்சர் ஆன பிறகு எந்த திட்டத்தையும் மக்களுக்காக அறிவிக்கவில்லை மேலும் தமிழகத்தில் எந்த சுற்று பயணமும் மேற்கொள்ளவில்லை என்று முதலமைச்சசர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: