இலங்கையில் புத்த சமய வருடாந்திர எசலா பெரஹரா திருவிழா

இலங்கை: இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் விழாவான எசலா பெரஹரா விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கண்டியில் உள்ள புத்தரின் பாதுகாக்கப்பட்ட புனிதப் பல்லுடன் யானைகள் குடை சூழ ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மின் விளக்குகளால் ஒளிரும் கட்டடங்கள், இசைக்கு ஏற்றபடி நடன அசைவுகளை ஏற்படுத்தும் கலைஞர்கள், ஆடி அசைந்துவரும் அலங்கரிக்கப்பட்ட யானைகள். இது இலங்கையில் வருடந்தோறும்  நடைபெற்று வரும் பாரம்பரிய மிக்க புத்த சமய திருவிழாவாகும்.

Advertising
Advertising

இவ்விழா  எசலா பெரஹரா விழா என்று அழைக்கப்படுகிறது. விழாவின் முக்கியமான அம்சமாக யானைகள் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. புத்தரின் புனித பல் அடங்கிய கலசத்தில் அலங்கரித்து யானை மீது ஏற்றி வாத்தியங்கள் முழங்க ஊர்வலகமாக கொண்டு செல்லப்பட்டது. கண்டி நகரில் உள்ள தலதா மாளிகையில் இருந்து 50 யானைகள் குடை சூழ தொடங்கிய ஊர்வலம், ஆடல் பாடலுடன் முக்கிய விதிகள் வழியே பயணித்தது. ஊர்வலத்தில் 2,000 கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நடனங்கள் ஆடிய படி சென்றது காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

ஈஸ்டர் தின குண்டு வெடிப்பை  கருத்தில் கொண்டு இவ்விழாவிற்கு வழக்கத்தை விட கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கிய  எசலா பெரஹரா விழா வருகின்ற 15-ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.

Related Stories: