சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய புதுச்சேரி பெண் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய புதுச்சேரி பெண் சென்னை விமானநிலையத்தில் நேற்று கைது செய்தனர்.சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அபுதாபியிலிருந்து ஓமன் ஏர்லைன்ஸ்  விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது  புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா(48) என்ற பெண் அந்த விமானத்தில் வந்து இறங்கினார். அப்போது அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Advertising
Advertising

அப்போது 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் மரிய தெரசா வீட்டில் இருந்து 11 பிரதான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருவதை அறிந்தனர். அதிலிருந்து மரிய தெரசா தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் அவர் மீது எல்ஓசி போட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடனே மரிய தெரசாவை கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து மரிய தெரசாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: