ஹாங்காங்கில் தொடர்போராட்டம் எதிரொலியாக விமானங்கள் அனைத்தும் ரத்து

சென்ட்ரல்: ஹாங்காங்கில் தொடர்போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங்காங் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஹாங்காங்கில் பதற்றம் ஏற்பட்டது.

Advertising
Advertising

Related Stories: