வந்தாச்சு கார்களுக்கான எலெக்ட்ரிக் போர்ட்டபிள் பேட்டரி

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படும் எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளும், திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் மிக முக்கியமான நடைமுறை பிரச்னை, அதிக தூரம் பயணிக்க இயலாது என்பதாக உள்ளது. திறன்வாய்ந்த பேட்டரிகள் மூலமாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சி நடந்துவருகிறது. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு கிடைக்க துவங்கியிருப்பது சிறந்த விஷயம். இந்நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜ் தீர்ந்துபோனால், உடனடியாக சார்ஜ் ஏற்றுவதற்கான போர்ட்டபிள் பேட்டரி ஒன்றை தனியார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, மொபைல் போன்களுக்கு பவர் பேங்க் வழங்கப்படுவது போலவே இந்த பேட்டரியை பயன்படுத்திக்கொள்ள முடியும். எலெக்ட்ரிக் கார் மற்றும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு இந்த போர்ட்டபிள் பேட்டரி சார்ஜரை பயன்படுத்த முடியும். பழைய மாடல்கள் மற்றும் புதிய மாடல்களுக்கும் ஏதுவான போர்ட்டுகளுடன் வந்துள்ளது. டைப்-2 கனெக்டர் வசதியும் இந்த பேட்டரியில் கொடுக்கப்பட்டுள்ளது.

சார்ஜ்கிரிட் என்ற பெயரில் 4 மாடல்களில் இந்த போர்ட்டபிள் பேட்டரி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லைட் என்ற பெயரிலான மாடல் ₹11,799 விலையிலும், புரோ-3பி மாடல் ₹32,499 விலையிலும் புரோ- டி2 மாடல் ₹39,499 விலையிலும் மற்றும் அல்ட்ரா என்ற மாடல் ₹48,699 விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.இந்த போர்ட்டபிள் பேட்டரிகளை தனது லிங்க்ஸ் டீலர்கள் வழியாகவும், அமேஸான் தளம் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் மூலமாகவும் விற்பனை செய்வதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு இந்த போர்ட்டபிள் பவர் பேங்க் மிகச்சிறந்த தீர்வாக அமையும் என்கிறது மெஜந்தா பவர் நிறுவனம்.

Related Stories: