கத்திரி துவையல்

செய்முறை : முதலில் கத்திரிக்காயின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி, தணலில் சுட்டு தோல் உரித்துக் கொள்ளவும். பின்னர் காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, புளி ஆகியவற்றை வதக்கி, ஆறிய பின் கத்திரிக்காயை சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு நல்லெண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும். அனைவருக்கும் பிடித்தமான கத்திரி துவையல் ரெடி.

Advertising
Advertising