செட்டிநாடு புலாவ்

செய்முறை : கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தக்காளி, பல்லாரியை நீளவாக்கில் நறுக்கவும். தேங்காயை மிக்ஸியில் அரைத்து 2 கப்களில் தேங்காய் பால் எடுத்து கொள்ளவும் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிரை பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும். பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும். அதன் பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.இக்கலவையை குக்கரில் கொட்டி அதனுடன் அரிசி, தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கிளறி, மூடி போடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை மிதமாக எரிய விட்டு சிறிது நேரம் கழித்து அணைக்கவும். கலக்கல் சுவையில் செட்டிநாடு புலாவ் தயார்.

Related Stories: