காளான் பன்னீர் மசாலா

செய்முறை :பல்லாரியை, தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும். காளான்களை நன்கு கழுவி நறுக்கவும். பன்னீரை துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் முந்திரிப்பருப்பு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.பின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி விடவும். இத்துடன் அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து சேர்த்து, மேலும் சில நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கலக்கவும். கட்டித்தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும் வரை வதக்கவும். கடைசியாக பன்னீரை போட்டு 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும். சப்பாத்தி, நாண் வகைகளுக்கு ஏற்ற டிஷ் இது.

Advertising
Advertising

Related Stories: