சமூக ஊடக விமர்சனங்களை கண்காணிக்க ரயில்வே துறை முடிவு... பயணிகளுக்கு பலன் தருமா?

ரயில்வேதுறை சமூகநூல், வாட்ஸ் அப், ட்விட்டர், யு டியூப் போன்ற சமூக ஊடக ங்களில் விமர்சனங்கள், கோரிக்கைகள், புகார்கள், பாராட்டுகள், சம்பவங்கள், வீடியோக்கள் என பலவிமாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடுகிறார்கள். பிரச்சனைகளில் தங்கள் தரப்பு நியாயத்தையோ, இயலாமைக்கான சூழல்களையோ அல்லது காரணங்களையோ ரயில்வே தெளிவு படுத்தும் வழக்கம் இல்லை. இந்த போக்கை மாற்ற ரயில்வே வாரியம் தற்போது முடிவு செய்து உள்ளது. இதற்காக ரயில்வேயின் பொதுத் தொடர்பு துறை விதிகள்- 2007 ல் தற்போது திருத்தம் மேற் கொண்டு இருக்கிறது.

Advertising
Advertising

ரயில்வே வாரிய சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு நிர்வாக இயக்குனர் உமேஷ் பலோன்டா, கடந்த ஜூன் 6ம் தேதி இதற்கான உத்தரவை வெளியிட்டார். அந்த உத்தரவில் சமூக ஊடகங்கள், பத்திரிக்கைகள் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் கண்காணிக்க அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் அனுபவம் உள்ள தனி யார் ஏஜென்சிகளை நியமிக்க வேண்டும். ரயில்வே மண்டல பொதுத் தொடர்பு தலைமை அதிகாரி இதற்கான கண்காணிப் பாராக செயல்பட வேண்டும். சமூக ஊடக பதிவுகள் சேமித்து வைப்பதோடு உடனுக்குடன் பரிசீலத்து தகுந்த பதில் அளிக்க வேண்டும். செல்போன் செயலி உருவாக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக ஊடகங்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்துமா? பயணிகளுக்கு இதனால் பலன் கிடைக்குமா ? மேலும் ஊடகங் களில் உலா வரும் போலியான தகவல்கள் கண்டறிய சைபர் கிரைம் உதவியுடன் இத்திட்டம் செயல் படுத்தப்படுமா ? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில்,அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் சமூக ஊடகங்களுக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் இடையே இடைவெளி இருந்து வருகிறது. பெரிய அளவில் விமர்சனங்கள் வரும் போது ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான சமூக ஊடக விமர்சனங்கள் ரயில்வேயின் தோற்றத்தை சிதைப்பதாக இருக்கிறது.

குறைபாடுகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கைகள் மேற்கொள்ள இத்திட்டம் ஏதுவாக இருக்கும். மேலும் பயணிகளின் கோரிக்கைகள் ஒருங்கிணைத்து அதற்கு ஏற்ப திட்டமிட முடியும். சமூக ஊடகபதிவுகள் ஆய்விற்கு உட்படுத்தும் நோக்கமோ, திட்ட மோ ரயில்வே வசம் இல்லை. இத்திட்டம் பொது மக்கள் வரவேற்பை பெறும் என கூறினார். ரயில்வே உபயோகிப்பாளர்கள் நலச் சங்க தலைவர் ஹரேஷ் கூறுகையில், பயணிகளின் முறையான தேவைகள், ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட ரயில் வே அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கடிதங்கள் மூலம் தெரியப் படுத்தி இருக்கிறோம். நேரில் சென்று மனுக்களாகவும் தருகிறோம்.

அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது நேரில் பார்த்து கோரிக்கைகள் முன் வைக்கிறோம். பாரளுமன்ற உறுப்பினர்கள் மூலம் ரயில்வே அமைச்சக கவனத்திற்கு கூட கொண்டு செல்கிறோம். அதற்கு பெரிய அளவில் பலன் எதுவும் கிடைப்பது இல்லை. திருவாரூ ரில் இருந்து திருச்சிக்கு காலை 5 அல்லது 6 மணிக்கு ஒரு பயணிகள் ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. சமூக ஊடகங்களின் பதிவுகளுக்கு பதில் கிடைக்கலாம். பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே என்றார்.

Related Stories: