வியாழன் கோளில் பூமியை விட அதிக தண்ணீர் உள்ளது!

வியாழனின் வளிமண்டலப் பரப்புக்குள் முதன்முதலாகச் சென்று சாதனை படைத்தது 1989-ம் ஆண்டு நாசா அனுப்பிய கலிலியோ விண்கலம்தான். அட்லாண்டிஸ் விண்கலம் மூலம் ஐந்து விண்வெளி வீரர்கள் விண்ணுக்குச் சென்று கலிலியோவை வியாழன் நோக்கி அனுப்பி வைத்தனர். ஆறு ஆண்டுகள் பயணத்துக்குப் பிறகு வியாழனை அடைந்த கலிலியோ அதன் துணைக் கோள்கள் பற்றிய பல உண்மைகளைக் கண்டறிவதற்கு உதவியது. வியாழனின் துணைக் கோள்களுள் ஒன்றான யுரோப்பாவின் உள்பகுதியில் உப்பு நீர்க் கடல் இருப்பதை அறிந்து கூறியதும் கலிலியோதான்.

இதையடுத்து கலிலியோ வியாழனின் துணைக் கோளில் பனிக்கட்டி இருப்பதை உறுதி செய்தது. சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் வியாழனில் அதிகமாக உள்ளது. இதனால் வியாழன் கோளில் அதிகமான நீர் இருக்குமென நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை உறுதி செய்ய அதிநவீன தொலைநோக்கி வைத்து நாசா விஞ்ஞானிகள் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் வியாழன் கிரகத்தில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்று ஆராயப்பட்டது. நாசா விஞ்ஞானிகள் நடத்திய அந்த ஆய்வில் பூமியைவிட 5 மடங்கு அதிக தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: