இந்திய வருமான வரித்துறையின் 159ஆவது ஆண்டு நிறைவு விழா....சேலத்தில் 'டேக்சத்தான்'விழிப்புணர்வு நடைபயணம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் முறையாக வருமான வரி செலுத்த வலியுறுத்தி வருமான வரித்துறை சார்பில் டேக்சத்தான் என்ற விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதுகுறித்து, சேலம், வருமான வரி முதன்மை கமிஷனர் பன்வாரிலால் மீனா ஏற்கனவே அறிக்கை வெளியியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இந்தியா விடுதலை பெற்ற பின்பு இந்திய வருமானவரி சட்டம், 1961-[1] இந்திய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 01-04-1962 முதல் இந்திய வருமான வரிச் சட்டம் செயல்படத் தொடங்கியது. இதன் அடிப்படையில் இந்திய வருமான வரித்துறை இன்று தனது 159ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது.

இதை முன்னிட்டு, சேலம் காந்தி சாலையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வருமான வரி செலுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இன்று காலை டேக்சத்தான் என்ற நடைபயணம் நடைபெற்றது. இதில் சேலம் வருமானவரி அதிகாரிகள், ஊழியர்கள், தணிக்கையாளர்கள், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பினரும் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணமாகச் சென்றனர். பின்னர் சேலம் வருமானவரி அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோன்று சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் இந்திய வருமான வரித்துறையின் 159ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

Related Stories: