×

சந்திரபாபு நாயுடுவின் அமராவதி திட்ட கனவு தகர்ப்பு: உலக வங்கியை தொடர்ந்து நிதியுதவி அளிக்க சீன வங்கியும் கைவிரிப்பு

ஹைதரபாத் : ஆந்திர மாநில தலைநகராக அமராவதி நகரை கட்டமைக்க ரூ.2000 கோடி கடன் தர ஒப்பந்தம் செய்து கொண்ட சீனாவைச் சேர்ந்த உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. தெலங்கானா மாநில  பிரிவினைக்கு பின்னர் ஆந்திராவிற்கு தலைநகராக அமராவதியை கட்டமைக்க அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக விவசாயிகளிடம் இருந்து 33,000 ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்பட்டது. ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்த பல திட்டங்களை தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரத்து செய்து வருகிறார்.

இந்த நிலையில் அமராவதியை தலைநகராக கட்டமைக்க ரூ. 3000 கோடி கடன் தர ஒப்புக் கொண்ட உலக வங்கி, கடந்த வாரம் திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஆந்திராவிற்கு கடன் வழங்க உலக வங்கியிடம் மத்திய அரசு கடன் விண்ணப்பத்தை திரும்பப் பெற்று கொண்டதே இதற்கு காரணமாகும். இந்த நிலையில்  புதிய தலைநகரை கட்டமைக்க ரூ.2000 கோடி கடன் தர ஒப்பந்தம் செய்த சீனாவைச் சேர்ந்த வங்கியும் தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது. சந்திரபாபு நாயுடு அறிவித்த பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அமராவதியை தலைநகராக்கும் அவரது திட்டமும் தற்போது தகர்ந்து வருகிறது.


Tags : Amaravathi, Chinese Banking, Cracking, Andhra, Sponsored, Chandrababu Naidu
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...