×

முரண்பாடு சரியா?

தமிழகத்தில், நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மகளிர் சுய உதவி  குழுக்கள் சார்பில் 25,532 முழுநேர ரேஷன் கடைகள், 9,154  பகுதிநேர ரேஷன்கடைகள் என மொத்தம் 34,686 ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இந்த ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இடையே நீண்ட காலமாக ஊதிய முரண்பாடு இருந்து வருகிறது. இந்த ஊதிய முரண்பாட்டை நீக்கவும், ஊதிய உயர்வு வழங்கவும் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதை ஏற்று, தமிழக அரசு சார்பில், கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் தலைமையில் குழு  அமைக்கப்பட்டது. இந்த குழு, தனது அறிக்கையை, தமிழக அரசுக்கு சமர்ப்பித்துவிட்டது. ஆனால், ஐந்து மாதங்கள் ஆகியும், அறிக்கை முடங்கி கிடக்கிறது. ஊதிய  உயர்வும் வழங்கப்படவில்லை. இதையடுத்து, ரேஷன் ஊழியர்கள், வரும் செப்.9 முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கும், ரேஷன் ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள அறிவிப்புகளை மீண்டும் சட்டசபையில் அறிவித்தது கண்டனத்துக்குரியது.
ரேஷன் கடைகளுக்கு 100 சதவீத பொருட்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும். பயோமெட்ரிக் முறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதிகாரிகள் ஆய்வின்போது தன்னிச்சையாக குறைகளை பதிவுசெய்யக்கூடாது. நிலுவையில் உள்ள மானிய தொகையை முழுமையாக விடுவிக்க வேண்டும்.

ரேஷன் கடைகளுக்கு கழிப்பறையுடன்கூடிய சொந்த கட்டிடம் கட்ட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதுவே ரேஷன் ஊழியர்களின் கோரிக்கை. மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே  ரே‌ஷன் கார்டு என்ற திட்டத்தை மாநில அரசுகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும்  எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, நாட்டின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், குடும்ப அட்டையை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த அறிவிப்பைபோல், நாடு முழுவதும் உள்ள ரேஷன் ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டால், ஊதிய முரண்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ரேஷன் ெபாருட்களும் மக்களுக்கு முறையாக கிடைக்கும் என்று நம்்புகின்றனர். ஊழியர்களின் ஊதிய முரண்பாடும் நீங்கும். மத்திய-மாநில அரசுகள் இணைந்து சுமூக தீர்வு காண்பது நல்லது.



Tags : The irony, right?
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...