×

வேட்பு மனுக்கள் மீதான ஆட்சேபனைகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒப்புகை சீட்டு: புதிதாக அறிமுகம்

சென்னை:  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அக்டோபர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுக்கள் மீதான ஆட்சேபனைகளுக்கு  ஒப்புகை சீட்டு வழங்கும் நடைமுறை வரும் உள்ளாட்சி தேர்தலில் புதிதாக அமல்படுத்த  மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மாதிரி ஒப்புகை சீட்டில் எந்த பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
 
ஆட்சேபனை தெரிவிக்கும் நபரின் பெயர். எந்த வேட்பாளரின் சார்பாக அவர் ஆட்சேபனை தெரிவிக்கிறார்.  எந்த வேட்பாளருக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கிறார்  உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரியின் கையெழுத்து, முத்திரை, நாள், இடம் உள்ளிட்ட தகவல்களும் இடம் பெற்றுள்ளன.  குறிப்பாக எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை அளிப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஒப்புகை சீட்டு வழங்கப்படும். வாய்மொழி உள்ளிட்ட எந்த வகையிலும் அளித்தாலும் இந்த ஒப்புகை சீட்டு வழங்கப்படாது. கடந்த காலங்களில் வேட்பு மனு பரிசீலனையின்போது வேட்பாளர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனைகளுக்கு வாய்மொழி மூலமாக தீர்வு காணப்பட்டது. வரும் தேர்தலில் இந்த நடைமுறை புதிதாக அமல்படுத்தபடவுள்ளது.  



Tags : Introduction ,to, Local Elections
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்