×

நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழக 21 சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாறுகிறது: * சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்க முடிவு * அதிகாரி தகவல்

சிறப்பு செய்தி
தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 21 சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாறுகிறது. இந்த சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக நெடுஞ்சாலைத்துறைக் கட்டுப்பாட்டில் 59,405 கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணி தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு, அதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதை தவிர்த்து 4,734 கி.மீ நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதியை கொண்டு, அந்த ஆணையம் சார்பில் பணிகள் நடக்கிறது. 1,900 கி.மீ நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதியில் தமிழக நெடுஞ்சாலைத்துறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அலகு பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளை செய்கிறது.

இந்த நிலையில் பெருகி வரும் போக்குவரத்திற்கேற்ப நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு 5 சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம் செய்து கொள்கை அளவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் 1,297 கி.மீ நீளம் கொண்ட 21 மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படிஊட்டி-கோத்தகிரி-மேட்டுபாளையம்,அப்துல்லாபுரம்-திருப்பத்தூர்,வேலூர்-ஒசூர்,தஞ்சாவூர்-மன்னார்குடி-திருத்துறைபூண்டி-வேதாரண்யம்-கோடியக்கரை,ஈரோடு-தாராபுரம்,ஈரோடு-பெருந்துறை-காங்கேயம்,சத்தி-சித்தோடு-ஈரோடு,பல்லடம்-தாராபுரம்,வத்தலகுண்டு-உசிலம்படி-பேரயைூர்-கல்லுப்பட்டி-கள்ளிக்குடி-காரியாபட்டி-திருச்சுழி-கமுதி-சாயல்குடி,தஞ்சாவூர்-சிவகங்கை-சாயல்குடி,ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு,சாத்தூர்-சிவகாசி-கழுகுமலை,ராமநாதபுரம்-நயினார்கோயில்-இளையான்குடி-சிவங்கை-மேலூர்,அருப்புக்கோட்டை-வாலிநோக்கம்-பருவக்குடி-கோவில்பட்டி-எட்டையபுரம்-விளாத்திகுளம்-வேம்பார், பவானி-காளிங்கராயம்பாளையம்-பெரியபுலியூர்-கவுந்தம்பாடி, கோபிச்செட்டிபாளையம்-குன்னத்தூர்-பெருமாநல்லூர், நாமக்கல்-துறையூர், முசிறி-துறையூர்-ஆத்தூர், சென்னை-சிப்காட்-திருபெரும்புதூர், திருச்செங்ேகாடு-மல்லசமத்திரம்-அரியனூர் ஆகிய 21 மாநில சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளை தரம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்தால், தொடர்ந்து அந்த சாலைகளின் மேம்பாட்டு பணிக்கு நிதி கேட்கப்படுகிறது. அதன்பிறகு, அந்த சாலைகளை நான்கு மற்றும் இரண்டு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து அந்த சாலைகளில் பணிகள் முடிந்த பிறகு, சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : 21 highways, controlled, Highways Department, become, National Highway
× RELATED தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா;...