×

அமலாபால் விவகாரம்: பெண் தலைவர் மீது போலீசில் புகார்

சென்னை: நடிகை அமலாபால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனைத்து மக்கள் கட்சி தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தயாரிப்பாளர் ப்ரியா நாயர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். சில தினங்களுக்கு முன்பு அனைத்து மக்கள் கட்சி தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா என்பவர் ‘ஆடை’ திரைப்படத்தில் நடித்த அமலாபாலை சமூக அக்கறை இல்லாதவர் என்றும், அதற்கு காரணம் அவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். அவர் பணம் புகழுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று பேசி இருந்தார். தனிப்பட்ட ஒருவரை பற்றி விமர்சிக்கும் போது அவர் சார்ந்த மாநிலத்தை இழுப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே ராஜேஸ்வரி ப்ரியா தனது கருத்தை திரும்ப பெற வேண்டும். மேலும் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும்.



Tags : Amlapal, female head of police, complainant
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...