மாநகராட்சி பள்ளி முன்பு பிளஸ் 2 மாணவனுக்கு சரமாரி கத்திகுத்து: சக மாணவர்களுக்கு வலை

சென்னை: வியாசர்பாடி அடுத்த எம்கேபி நகர் 3வது மெயின் ரோட்டில் சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் வியாசர்பாடி சின்னத்தம்பி தெருவை சேர்ந்த மாணவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. பிளஸ் 2  மாணவன் ேநற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல வெளியே வந்தபோது, பிளஸ் 1 படிக்கும் மாணவன், சக மாணவர்கள் 10 பேருடன் சேர்ந்து பிளஸ் 2 பயிலும் மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் பிளஸ்2 மாணவனை சரமாரியாக குத்தியுள்ளனர்.

இதில் வலி தங்க முடியாமல் மாணவன் கத்தினான். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அதை பார்த்த தாக்குதல் நடத்திய பிளஸ் 1 மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.தகவலறிந்த எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிளஸ் 2 மாணனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனை கத்தியால் குத்திய சக பள்ளி மாணவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வியாசர்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.Tags : Municipal School,Previously ,Shout Out ,Plus Two Student
× RELATED குழந்தைக்கு கத்திக்குத்து