துரோகம் இழைத்த மோடி ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி,: காஷ்மீர் பிரச்னையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், “இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா சமரசம் பேசும் நடுவராக செயல்படவேண்டும் என பிரதமர் ேமாடி கேட்டுக் கொண்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

ஆனால் வலுவிழந்த வெளியுறவுத் துறை இதனை இல்லை என மறுக்கின்றது. அவ்வாறு அதிபர் டிரம்ப் கூறுவது உண்மையென்றால் நாட்டின் நலன் மற்றும் 1972ம் ஆண்டு ஷிம்லா ஒப்பந்தத்துக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்துவிட்டார் என்பதே அர்த்தமாகும். அமெரிக்க அதிபர் உடனான பிரதமரின் பேச்சுவார்த்தையின்போது இருவரும் பேசியது என்ன என்பது குறித்து பிரதமர்மோடி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related Stories: