இந்தியாவுடன் முதல் 2 டி20 போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் நரைன், போலார்டு

ஆன்டிகுவா: இந்திய அணியுடன் முதல் 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆல் ரவுண்டர்கள் சுனில் நரைன், கெய்ரன் போலார்டு இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி செப்டம்பர் 4ம் தேதி வரை நடபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியுடனான முதல் 2 டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கார்லோஸ் பிராத்வெயிட் தலைமையிலான அணியில் மொத்தம் 14 வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கேல் அணியில் சேர்க்கப்படவில்லை. கேல் தற்போது கனடாவில் நடைபெறும் ஜிடி20 தொடருக்கு ஒப்பந்தமாகி உள்ளதால், அவரது பெயரை தேர்வுக் குழுவினர் பரிசீலிக்கவில்லை. ஆல் ரவுண்டர்கள் சுனில் நரைன், கெய்ரன் போலார்டு இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளனர். மற்றொரு ஆல் ரவுண்டரான ஆந்த்ரே ரஸ்ஸல் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே களமிறங்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் அந்தோனி பிராம்பிள் புதுமுக வீரராக இடம் பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலக கோப்பை தொடரி மனதில் வைத்து அணியை தேர்வு செய்துள்ளதாக தேர்வுக் குழுவின் இடைக்கால தலைவர் ராபர்ட் ஹேய்ன்ஸ் கூறியுள்ளார். முதல் 2 டி20 போட்டிகளும் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.கயானாவில் நடைபெற உள்ள 3வது டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி பின்னர் அறிவிக்கப்படும்.வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: கார்லோஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), அந்தோனி பிராம்பிள் (விக்கெட் கீப்பர்), ஜான் கேம்பெல், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரோன் ஹெட்மயர், எவின் லூயிஸ், சுனில் நரைன், கீமோ பால், கேரி பியரி, கெய்ரன் போலார்டு, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பாவெல், ஆந்த்ரே ரஸ்ஸல், ஒஷேன் தாமஸ்.

Related Stories: