ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நாற்றுகள் அறுவடை செய்யும் வயலில் குழாய் பதிக்கும் பணி துவக்கம் விவசாயிகள் அதிர்ச்சி

தரங்கம்பாடி: செம்பனார்கோவில் அருகே விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி மீண்டும் துவங்கியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  நாகை மாவட்டம்,  சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து நாங்கூர், காத்திருப்பு, தலைச்சங்காடு, காளஹஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் ராட்சத குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசில் புகார் கொடுத்தனர். விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது. விவசாயிகள், வயல்களில் விதைகள் விட்டு நாற்றுகள் வளர்த்து வரும் நிலையில், குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது நாற்றுகள் வளர்ந்து அறுவடையை நெருங்கும் நேரத்தில் மீண்டும் செம்பனார்கோவில் அருகே உமையாள்புரத்தில் குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனத்தினர் தொடங்கி இருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: