சர்ச்சை சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு

முசாபர்நகர்: உபி.யின் கைரானா தொகுதி எம்எல்ஏ நாகித் ஹசன். இவர் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் கைரானா தொகுதியில் பாஜவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் கடைகளில் பொருட்கள் வாங்காமல் புறக்கணிக்கும்படி குறிப்பிட்ட மதத்தினரை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, வன்முறையை தூண்டுதல், இருபிரிவினருக்கு இடையே பகைமையை உண்டாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: