தான் பிறந்த கிராமத்தில் வசிக்கும் 2000 குடும்பத்துக்கு தலா 10 லட்சம் பரிசு: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி

ஐதராபாத்: தான் பிறந்த சிந்தமடக்கா கிராமத்தில் வசிக்கும் 2000 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் பரிசு வழங்குவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்தார். தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் சித்திப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சிந்தமடக்கா கிராமத்திற்கு சென்றார். இது முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்த ஊராகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது வாக்களிப்பதற்காக சென்ற அவர் நீண்ட நாளுக்கு பின் தனது சொந்த ஊருக்கு சென்றார். அவருடன் சித்திபேட்டை எம்எல்ஏ ஹரிஸ்ராவ் உடன் சென்றார். அங்கு சுமார் 5 மணிநேரம் தங்கியிருந்த முதல்வர் சந்திரசேகரராவ், தனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர் ராகவா ரெட்டி வீட்டுக்கு சென்றார். அப்போது பிற்பட்ட வகுப்பு மாணவிகள் தங்கி படிக்கும் பள்ளிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

அங்கு தனது இளமைக்கால மலரும் நினைவுகளை பகிர்ந்து ெகாண்டார். விழாவில் முதல்வர் பேசியதாவது:  சிந்தமடக்கா கிராமத்தை தங்க பெட்டகமாக மாற்றுவதே எனது விருப்பம். இதற்காக இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் பல்வேறு அரசு திட்டங்கள் மூலம் தலா 10 லட்சம் பலன்பெறும் வகையிலான திட்டங்களை அறிவிக்கிறேன். இதன்படி இங்குள்ள 2,000 குடும்பத்தினருக்கும் தலா 2 படுக்கை அறையுடன் கூடிய ஒரு வீடு, சூரியசக்தி மின்வசதி, 24 மணிநேரம் குடிநீர் வசதி கிடைக்கும். இந்த கிராமம் இயற்கையிலேயே குளங்கள் மற்றும் ஏரிகளால் சூழப்பட்டு நல்ல வாஸ்துடன் அமைந்துள்ளது. இது தவிர இந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக 50 கோடியில் ேமம்பாட்டு பணி மற்றும் சித்திபேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா 50 லட்சத்தில் மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: