×

சீனா முன்னாள் பிரதமர் லி கெங் காலமானார்

பீஜிங்: சீனாவின் முன்னாள் பிரதமர் லி கெங்(91). கம்யூனிஸ்ட் குடும்பத்தில் கடந்த 1928ம் ஆண்டு லி கெங் பிறந்தார். குமிடோங் அரசால் அவரது தந்தை தூக்கிலிப்பட்டார். முன்னாள் பிரதமர் ஜூகோ என்லாய் மற்றும் மனைவி டெங் யிங்சோ மூலமாக அவர் முக்கிய மற்றும் சர்ச்சைக்குரிய தலைவராக உருவெடுத்தார். சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைக்குழு தலைவராக இருந்தபோது கடந்த 2001ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். 1989ம் ஆண்டு 100க்கும் மேற்பட்ேடார் கொல்லப்பட்ட தியானமென் சதுக்கம் போராட்டத்தை அணுகிய முறை காரணமாக அனைவராலும் அறியப்பட்டவர். 91வயதாகும் லி கெங் முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பீஜிங்கில் நேற்று முன்தினம் இரவு லி கெங் உயிரிழந்தார்.

Tags : Former Prime Minister , China Li Keng ,passed away
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...