நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட மூவர் வெட்டிக்கொலை: போலீசார் தீவிர விசாரணை

நெல்லை: நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட மூவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயராக திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி  பணியாற்றியுள்ளார். தற்போது, திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை சுமார் 6 மணியளவில், தனது கணவருடன்  உமா மகேஸ்வரி வீட்டில் இருந்தபோது  வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த பணிப்பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

Advertising
Advertising

இதனையடுத்து மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுடைய உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், சொத்து பிரச்சனையா? அரசியல் மோதல் விவகாரமா? என்பது குறித்து போலீசார்  விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கொலை நெல்லை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: