×

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததைத் தொடர்ந்து நிர்மலா சீத்தாராமனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

சென்னை: டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.தமிழகத்தின் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து டெல்லி சென்றார். நேற்று காலையில் பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.  அப்போது, செயல் தலைவர் ஜே.பி.நட்டாவும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழக அதிமுக தலைவர்களின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை என்று அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது. மேலும் சில விளக்கங்களையும் அவர் கேட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், டெல்லியில் முகாமிட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இச்சந்திப்பின் போது தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகள் குறித்து கோரிக்கை மனுவினை நிதியமைச்சரிடம் துணை முதல்வர் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Amit Shah, Nirmala Sitharaman, O. Pannirselvam in Delhi
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்