மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கை ஆகும். இதனை வலியுறுத்தி 5 நாட்களாக தொடர்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் படி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.

Advertising
Advertising

இதனிடையே மயிலாடுதுறையில் பொது தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் சைக்கிள் ரிச்ஷாவில் கருப்பு கொடியை கட்டி நகரின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கும் வரை தொடர் போடட்டங்கள் நடைபெறும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: