×

விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை: திட்டம் கைவிடப்படுகிறதா?

சென்னை: விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறப்படுவதால் அத்திட்டம் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 11 மற்றும் 12 வது வகுப்பு பயிலும் மாணவிகள் கல்வி கற்ப்பதை ஊக்குவிப்பதற்க்காக விலையில்லா மிதிவண்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2001 ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட அந்த திட்டம் பின்பு அனைத்து பிரிவு மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்காலத்திலும் விலையில்லா மிதிவண்டி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. இந்த விலையில்லா மிதிவண்டி திட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2013-2014 ம் ஆண்டு ரூ.217 கோடியும், 2014- 2015 ம் ஆண்டு ரூ.218 கோடியும், 2015- 2016 ம் ஆண்டு ரூ. 235 கோடியும் விலையில்லா மிதிவண்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது.

இதே போல  2016- 2017 ம் ஆண்டு ரூ.250 கோடியும், 2017- 2018 ம் ஆண்டு வெறும் ரூ. 16 கோடிமட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018- 2019ம் ஆண்டு அரசு கொள்ளகை விளக்க குறிப்பில்  இத்திட்டம் குறித்தே குறிப்பிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது. 2019- 2020 ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் கீழ் 2017,18, 19ம் கல்வியாண்டில் 11.65 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bicycle, Project, Tamilnadu, Funding, Dropping?
× RELATED சுற்றுச்சூழல் நிலையை பாதுகாக்க திட்டம்: சட்ட முன்வடிவு தாக்கல்