மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட தினம்... தாமிரபரணி ஆற்றில் கட்சிகள்,அமைப்புகள் நினைவஞ்சலி

திருநெல்வேலி: மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டதன் 20-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கட்சியினர் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மலர் வலையத்துடன் பேரணியாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தாமிரபரணி ஆற்றில் இறங்கி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போலீஸ் அடக்குமுறையால் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களை பாதுக்காக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை ஆகும். அதே நேரம் தொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertising
Advertising

கடந்த 1999-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி கூலி உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். தாமிரபரணி ஆற்றுப் படுகையில் நடந்த இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் போலீசாரின் தாக்குதலால் ஆற்றில் குதித்த 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழந்த 20-ன் ஆண்டு நினைவு நாளான இன்று மதிமுக, இடதுசாரி, மற்றும் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: