நாளை அறிமுகமாகிறது ஹூண்டாய் எலக்ட்ரிக் கார்: முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்

சென்னை :சுற்றுசூழல் மாசில்லாத பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பான மின்சார காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசிடம் ஹூண்டாய் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தது. அந்த வகையில் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் மின்சார கார்களை தயாரிக்கும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த பேட்டரி காரில் தற்போது பயன்படுத்தும் கார்களை போன்று அனைத்து வசதிகளும் உள்ளன.

கோனா என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார கார்கள் நாளை முதல் அறிமுகம் செய்யப்படுகின்றன. முதல் காரை நாளை காலை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைக்க இருக்கிறார்.    இந்த பேட்டரி கார்களை 7 மணி நேரம் தொடர்ந்து சார்ஜ் செய்தால் 600 கி.மீ. வரை ஓடும் திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த  எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் திட்டத்திற்காக ஹூண்டாய் நிறுவனம் 7,000 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கடந்த ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி சலுகை அறிவிக்கப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் எனவும் அரசு அளிக்கும் வரிச் சலுகை காரணமாக வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் கார் பக்கமே ஆர்வம் காட்டப்போகிறார்கள் எனவும் கருதப்படுகிறது.

Related Stories: