திருநெல்வேலி மாநகராட்சியில் குப்பை சேகரிக்க பேட்டரி ஆட்டோ

நெல்லை : திருநெல்வேலி மாநகராட்சியில் தெருக்களில் தேங்கி கிடக்கும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து எடுக்க பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நெல்லை மாநகராட்சியில் முதல் முறையாக குப்பைகளை சேகரிக்க சென்னையில் இருந்து 32 பேட்டரி 3 சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.இந்த வண்டிகளில் 500 கிலோ குப்பைகளை ஏற்றி செல்ல முடியும். குறுகிய சாலைகளில் வாகனத்தை இயக்க முடியும். இந்த பேட்டரி ஆட்டோக்களால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: