மக்களவைத் தேர்தலில் வெறும் 8 இயந்திரங்களில் கோளாறு; 51 வாக்குகள் மட்டுமே பொருந்தவில்லை : தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லி : அண்மையில் நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 51 வாக்குகள் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் வித்தியாசப்பட்டு இருந்ததாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் என்ற ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாகும். ஆனால் நாடு முழுவதும் வெறும் 8 இயந்திரங்களில் மட்டுமே கோளாறு இருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சமவாய்ப்பாக 26,687 விவிபேட் இயந்திரங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன என்று ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதில் 51 வாக்குகள் மட்டுமே பொருந்திப் போகவில்லை என்றும் கூறியுள்ளது. இது இயந்திரங்களின் தவறு அல்ல என்றும் தேர்தல் பணியாளர்கள் செய்த தவறே என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இந்த கோளாறு தேர்தல் முடிவுகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறி இருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், மொத்தம் 51 வாக்குகள் மட்டுமே வித்தியாசப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

Related Stories: