×

சென்னை கொளத்தூரில் ரூ.82 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட ஹரிதாஸ் தாமரை குளத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

சென்னை: சென்னை கொளத்தூரில் 82 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்ட ஹரிதாஸ் தாமரை குளத்தை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். குளத்தை பார்வையிட்ட பிறகு, குளக்கரையோரம் மரக்கன்றுகளை நாட்டார். முன்னதாக, கொளத்தூர் பகுதியில் உள்ள ஹரிதாஸ் தாமரை குளத்தை 5 கட்டமாக ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு இந்த குளத்தை முழுவதுமாக சீரமைக்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த சீரமைப்பு பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.82 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஹரிதாஸ் தாமரை குளத்தின் மொத்த பரப்பளவு 7,200 சதுர அடியாகும். இந்த குளத்தை சுற்றி பொதுமக்கள் நடக்க எதுவாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறுவர்கள் விளையாட ஏற்றவாறு விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 10 மணி அளவில் ஸ்டாலின் குளத்தை திறந்து வைத்தார். மேலும், இந்த பகுதி இயற்கை வளம் நிறைந்து காணப்பட வேண்டும் என்பதற்காக, குளத்தை சுற்றிலும் 60 மரக்கன்றுகளை நாட்டார். கோடைகாலங்களில், கொளத்தூர் பகுதியில் அதிக தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாகவே, ரூ.82 லட்சம் செலவில் குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தண்ணீர் அனைத்து காலங்களிலும் சேமித்து வைக்கப்படும். அதேபோல, மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் தண்ணீர் குழாய் மூலம் குளத்திற்கு செல்லும் வண்ணம் சீரமைக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai, Kolathur, Haridas Lotus Pond, Stalin, Opening
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...