கேரளாவில் தொடர் கனமழை: மேலும் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்டை நீட்டித்தது இந்திய வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையையும்  விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த 3 நாட்களுக்கும்  மேலாக  பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக  காசர்கோடு, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து  வருகிறது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்ககை கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக  கேரளா முழுவதும் 7 மாவட்டங்களில் வெள்ள நிவாரண முகாம்கள்  திறக்கப்பட்டுள்ளன. இதில் 165 குடும்பங்களை சேர்ந்த 835 தங்க  வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் மழை பாதிப்புகள் குறித்து தீவிரமான கண்காணிப்பை செலுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவுறுத்தியுள்ளார். இடுக்கி மாவட்டம் குளமாவ்--நாளியானி ரோட்டில், கோழிப்பள்ளி அருகே ஏற்பட்ட மண் சரிவால் நாளியானி, தேவருபாறை, பூமால, வலியகண்டம் உட்பட மலைவாழ் மக்கள் வசிக்கும் ஏழு கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று இன்று காசர்கோடு, வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. கேரளாவில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக  காசர்கோடு, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து  வருகிறது. இந்நிலையில் காசர்கோடு, வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு மேலும் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்வதால் இடுக்கி, பெரியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இடுக்கி அணை ஆசியாவில் மிக உயரமான ஆர்ச் அணையாகும். 555 அடி உயரம் கொண்டது. தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 463.40 அடியாக இருந்தது. கடந்த 3 நாட்களில் 7 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் மேலும் நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: