மகளிர் ஆஷஸ் டெஸ்ட் டிரா

டான்டன் : ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளிடையே நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி, எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.கூப்பர் அசோசியேட்ஸ் கவுன்டி மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 420 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. எலிஸ் பெர்ரி 116, ரச்சேல் ஹேய்ன்ஸ் 87, அலிஸா ஹீலி 58, கேப்டன் மெக் லேன்னிங் 57, பெத் மூனி 51 ரன் விளாசினர். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது.

நதாலியே ஸ்கிவர் 88, ஏமி ஜோன்ஸ் 64 ரன், கேப்டன் ஹீதர் நைட், லாரா மார்ஷ் தலா 28 ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 145 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் ஆஸி. மகளிர் அணி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.Tags : Women, Ashes, Test, Tr
× RELATED கஞ்சா விற்ற பெண் உள்பட 13 பேருக்கு குண்டாஸ்