முத்தரப்பு கிரிக்கெட் தொடக்க போட்டியில் இந்தியா யு-19 அசத்தல்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு யு-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில், இந்தியா யு-19 அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து யு-19 அணியை வீழ்த்தியது. வொர்செஸ்டர் கவுன்டி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து யு-19 அணி 46.3 ஓவரில் 204 ரன்னுக்கு சுருண்டது. கோல்ட்ஸ்வொர்தி அதிகபட்சமாக 58 ரன் எடுத்தார். இந்தியா யு-19 பந்துவீச்சில் கார்த்திக் தியாகி, ரவி பிஷ்னோய் தலா 3, சுஷாந்த் மிஷ்ரா, வித்யாதர் பாட்டில் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா யு-19 அணி 39.2 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்து அபாரமாக வென்றது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 78 ரன் (115 பந்து, 9 பவுண்டரி), சக்சேனா 43, கேப்டன் பிரியம் கார்க் 38 ரன் விளாசினர். இந்திய யு-19 அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை வங்கதேச யு-19 அணியை சந்திக்கிறது.Tags : Tripartite, Cricket Opener, Match, India U-19, Wicked
× RELATED யு-19 உலக கோப்பை அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா