போரூர் அருகே சொகுசு பங்களாவில் துப்பாக்கி சூடு நடத்திய முக்கிய குற்றவாளி கைது: கூட்டாளியும் சிக்கினார்

பல்லாவரம்: போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சூர்யகாந்த் (38), இவரது மனைவி சுனிதா (35), சாப்ட்வேர் இன்ஜினியர்களான இவர்கள் இருவரும் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள சொகுசு பங்களா பங்களாவில் வசித்து வந்தனர். கடந்த வாரம் சுனிதாவின் தம்பி தீபக் கேரளாவில் இருந்து தனது அக்காவை பார்க்க காரில் வந்தார். அங்கிருந்த காவலாளி சுனிதாவின் உத்தரவுப்படி, தீபக்கை உள்ளே விட மறுத்ததால் ஆத்திரமடைந்த தீபக், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, வானத்தை நோக்கி 2 முறை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி சென்ற தீபக்கை பிடிக்க கேரள மாநிலம் சென்றபோது, அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

மேலும் கைது செய்ய ஒத்துழைப்பு கொடுக்காததால், தீபக்கை கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவத்தன்று அவருடன் காரை ஓட்டி வந்த அவரது நண்பர் கேரள மாநிலத்தை சேர்ந்த வினில்குமார் (27), என்பவரை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து  சிறையில் அடைத்தனர். இவரிடமிருந்து கார் மற்றும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: