பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டிப்பு

ஐ.நா: வெனிசுலாவில் அணிசாரா நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பாகிஸ்தான் சார்பில் பங்கேற்ற அந்நாட்டு பிரதிநிதி அண்ட்லீப் அப்பாஸ் பேசுகையில், ‘காஷ்மீரில் மனித உரிமை மீறல் உள்ளது’ என கூறினார்.  இதற்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரும் ஐநா.வுக்கான இந்திய பிரதிநிதியுமான சையத் அக்பருதீன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வௌியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய ஒரு மன்றத்தில் இத்தகைய பிரச்னைகளை பற்றி பேசுவதோ, எழுப்புவதோ கூடாது. ஆனால், ஒரு தூதுக்குழு (பாகிஸ்தான்) இப்படி ஒரு செயலை முயற்சித்துள்ளது. இதற்கு எந்த ஒரு உறுப்பினரும் பதிலளிக்கவில்லை. ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை வேறு ஒரு நாட்டில் குறைத்து மதிப்பிடக்கூடிய வகையில் பேசக்கூடாது’ என்று கூறியுள்ளார்.

Related Stories: